சூர்யாவின் "ரெட்ரோ" - 10வது எபிசோட் காமிக்ஸ் வடிவ படப்பிடிப்பு காட்சி

சென்னை,நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி இருந்தது. மேலும், வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது 10-வது எபிசோட் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. வரும் 18ம் தேதி ரெட்ரோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. EPI 010: Offscreen Magicians of RETRO! ✨When Suriya sir asked, "Is the team ready?" Karthik Subbaraj, mimicking one of Suriya's old iconic dialogues, smiled & said,"Sir, we're just 10 people… but we're always ready. We can do anything!" Jackie – The Set Magician… pic.twitter.com/1DSPVs2b9R
மூலக்கதை
