ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்... உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்

  தினத்தந்தி
ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்... உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்

முல்லன்பூர்,18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் 31வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாபின் தொடக்க வீரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன், ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர்.இதையடுத்து களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எடுக்காமலும், ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னிலும், நேஹல் வதேரா 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சூர்யன்ஷ் ஷெட்ஜே 4 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஷஷாங் சிங் மற்றும் பார்ட்லெட் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷஷாங் சிங் 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா ஆடி வருகிறது.இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சுனில் நரைன் ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை சுனில் நரைன் (36 விக்கெட்) படைத்துள்ளார்.ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்:சுனில் நரைன் - 36 விக்கெட் (எதிரணி பஞ்சாப் கிங்ஸ்)உமேஷ் யாதவ் - 35 விக்கெட் (எதிரணி பஞ்சாப் கிங்ஸ்)டுவைன் பிராவோ - 33 விக்கெட் (எதிரணி மும்பை இந்தியன்ஸ்)மொஹித் சர்மா - 33 விக்கெட் (எதிரணி மும்பை இந்தியன்ஸ்)யுஸ்வேந்திர சாஹல் - 32 விக்கெட் (எதிரணி பஞ்சாப் கிங்ஸ்)புவனேஷ்வர் குமார் - 32 விக்கெட் (எதிரணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

மூலக்கதை