திருநங்கையர் நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு.திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச்… pic.twitter.com/9hqgrjJaW0
மூலக்கதை
