மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை,தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மதபோதகர். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்த 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் காட்டூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.தொடர்ந்து கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். வருகிற 25-ந் தேதி வரை ஜான் ஜெபராஜ் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே ஜான் ஜெபராஜ் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மூலக்கதை
