மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிப்பா? - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை,சென்னை மெரினா கடற்கரை சுற்றுலா தளம் என்பதையும் தாண்டி, மாநகரின் தவிர்க்க முடியாத அடையாளமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இளைப்பாற ஏற்ற இடமாக திகழ்கிறது. ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின் போதும் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்து நேரத்தை செலவிடுகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம், கடற்கரைக்கு வருவோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் ஆகும். இந்நிலையில் தான், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு, பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி விரைவில் அமலாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் செய்தி உலா வந்தது. இந்தநிலையில், மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மூலக்கதை
