தென் மேற்கு பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

  தினத்தந்தி
தென் மேற்கு பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்யும்  இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி,இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைக்காலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இந்தியாவில் எப்படி இருக்கும் என்றும் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நடப்பாண்டு ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு குறைவான அளவிலேயே பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை 105 சதவீதத்திற்கு மேல் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சராசரியாக 87 செ.மீ. மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மூலக்கதை