"எஸ்.டி.ஆர் 49" படத்திற்கு இசையமைப்பது குறித்து சாய் அபியங்கர் நெகிழ்ச்சி

  தினத்தந்தி
எஸ்.டி.ஆர் 49 படத்திற்கு இசையமைப்பது குறித்து சாய் அபியங்கர் நெகிழ்ச்சி

சென்னை,தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 51' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையக்கவுள்ளார். தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்பு 'எஸ்டிஆர் - 49' படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் "சிம்புவை திரையில் பார்த்து ரசித்த நான், இன்று இவரின் படத்திற்கே இசையமைக்கிறேன். 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பதை நிரூபிக்கிறது. லவ் யூ சிம்பு அண்ணா" என இசையமைப்பாளர் சாய் அபியங்கர் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.From watching him on screen to composing for his film ,life came full circle today ♥️ Love you @SilambarasanTR_ brother , @ImRamkumar_B brother ♥️ , @AakashBaskaran ♥️ #mostwantedstudent https://t.co/m877uitvvW

மூலக்கதை