எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை, தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. முன்னதாக, பிப்ரவரி 22-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட நாளில் செய்முறை தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள். 12 ஆயிரத்து 480 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் 4,113 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதினார்கள்.தேர்வு தொடங்கிய முதல் நாளான மார்ச் 28-ந் தேதி தமிழ், ஏப்ரல் 2-ந் தேதி ஆங்கிலம், 4-ந் தேதி விருப்ப மொழி, 7-ந் தேதி கணிதம், 11-ந் தேதி அறிவியல் என குறிப்பிட்ட இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ - மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கப்பட இருக்கிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
