தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம்(எ)வெள்ளையன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய, தூத்துக்குடியில் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மதன்குமார் (வயது 23), 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாலைக்கனி (வயது 23), கண்ணன் மகன் சிவா (வயது 22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
