நீட் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு - அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை,தமிழக சட்டசபையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தநிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-ஒத்த கருத்துடைய பல்வேறு மாநிலங்கள் நம்முடன் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் நம் மீது நம்பிக்கையில் உள்ளனர். தேர்தலுக்காக எந்த காரியங்களையும் முன்னெடுப்பவர்கள் நாங்கள் அல்ல.மத்திய - மாநில அரசு இடையிலான உறவை மேம்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் இந்தக் குழு வரைவு அறிக்கையை மாநில அரசுக்கு வழங்கும். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இடம்பெறுவர். நீட் விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றார்.
மூலக்கதை
