போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை
சென்னை ,தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு. பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும். பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று.என தெரிவித்துள்ளார் .




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
