டெல்லியில் கட்டண உயர்வு விவகாரம்; பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரேகா குப்தா

  தினத்தந்தி
டெல்லியில் கட்டண உயர்வு விவகாரம்; பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரேகா குப்தா

புதுடெல்லி,டெல்லியில் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை செலுத்த தவறும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்பும் சம்பவங்களும் நடந்துள்ளன.இதனால், பெற்றோர் அந்த பள்ளிகளுக்கு வெளியே, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பெற்றோர்கள் என்னை சந்தித்து வருகின்றனர்.அவர்களுடைய வருத்தங்களை பகிர்ந்து உள்ளனர். பெற்றோரையோ அல்லது குழந்தைகளையோ துன்புறுத்தவோ, வெளியேற்றும் அச்சுறுத்தல் விடவோ அல்லது தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தவோ எந்தவொரு பள்ளிக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விதிகளை மீறும் பள்ளிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்து உள்ளார்.புகார்கள் பெறப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மாணவர்களையும், பெற்றோரையும் பாதுகாப்பதில் மாநில அரசு ஈடுபாட்டுடன் செயல்படும் என வலியுறுத்தி கூறியுள்ளார்.இதுபற்றி தொடர்புடைய அதிகாரிகளிடம், உடனடியாக விசாரணை மேற்கொண்டு, கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார்.கல்வி துறையில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் வெளிப்படை தன்மையுடனும், சம வாய்ப்புடனும் இருப்பதில் டெல்லி அரசு முழு அளவிலான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.आज जनसंवाद कार्यक्रम के दौरान क्वीन मैरी स्कूल, मॉडल टाउन से संबंधित एक मामला सामने आया, जिसमें बच्चों के परिजनों ने गलत तरीके से फीस वसूली और बच्चों को स्कूल से निकाले जाने की शिकायत दर्ज की।इस विषय पर तुरंत संज्ञान लेते हुए संबंधित अधिकारियों को तत्काल जांच कर कड़ी और आवश्यक… pic.twitter.com/gVThK6jFTn

மூலக்கதை