'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு

சென்னை,தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'ஓம் காளி ஜெய் காளி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த வெப் தொடரை ராமு செல்லப்பா இயக்கியுள்ளார். இந்த தொடர் குலசேகரபட்டினம் தசர திருவிழா பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. ராமு செல்லப்பா, குமரவேல் திரைக்கதை எழுதியுள்ள இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் வருகிற மார்ச் 28-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'ஓம் காளி ஜெய் காளி' தொடர் டிரெய்லர் வெளியாகி உள்ளது. The Wait is Over! Trailer of Om Kali Jai Kali is here #HotstarSpecials #OmKaliJaiKali Streaming exclusively on #JioHotstar from March 28.#OmKaliJaiKali #OKJK #OKJKonJioHotstar #OKJKTrailer #JioHotstarTamil @ActorVemal @ramuchellappa #Jegannath #Boxofficestudio… pic.twitter.com/6RWr1Qyrsg
மூலக்கதை
