ஆந்திர மாநில கட்சி தலைவர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு
அமராவதி,தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின்படி பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (12.3.2025) ஆந்திரா மாநில முக்கிய கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-"சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின்படி, தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சித் தலைவர்களையும் அழைத்து விவாதிக்கப்பட வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கியக் கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக முதல்-அமைச்சர் கடிதத்தை ஒப்படைக்க, தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆந்திர மாநிலத்திற்குச் சென்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதக்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியை இன்று (12.3.2025) நேரில் சந்தித்து, தமிழக முதல்-அமைச்சரின் கடிதத்தை ஒப்படைத்து, மார்ச் 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.அதனைத் தொடர்ந்து, இன்று காலையிலேயே தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவையும் நேரில் சந்தித்து, முதல்-அமைச்சரின் கடிதத்தினை ஒப்படைத்து, கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
