2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ரோகித் சர்மா விரும்புகிறார்; ரிக்கி பாண்டிங்

சிட்னி,சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்தார்.சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்ற நிலையில் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என வதந்தி பரவியது. ஆனால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று ரோகித் சர்மா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்நிலையில், 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ரோகித் சர்மா விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறுகையில்,2023ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது ரோகித் சர்மாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா தான். 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என ரோகித் சர்மா விரும்பலாம். அவரது தலைமையிலான அணி டி20, சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் கிரிக்கெட் ஆகிய 3 வகையிலான கிரிக்கெட் தொடரின் கோப்பைகளையும் வெல்ல வேண்டுமென ரோகித் சர்மா விரும்பலாம். டி20, சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லவில்லை. 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை' என்றார்.
மூலக்கதை
