மகளிர் பிரீமியர் லீக்: கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

  தினத்தந்தி
மகளிர் பிரீமியர் லீக்: கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடைபெற்ற 20-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மந்தனா 53 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 49 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் ஹேய்லி மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனையடுத்து 200 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நாட் சிவெர் 69 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளும், எலிஸ் பெர்ரி, கிம் கார்த் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூருவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

மூலக்கதை