டெஸ்ட் கிரிக்கெட் 150-வது ஆண்டு கொண்டாட்டம்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே சிறப்பு போட்டி

  தினத்தந்தி
டெஸ்ட் கிரிக்கெட் 150வது ஆண்டு கொண்டாட்டம்: ஆஸ்திரேலியா  இங்கிலாந்து இடையே சிறப்பு போட்டி

மெல்போர்ன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு கால கொண்டாட்டம் 2027-ல் தொடங்குகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டியை நடத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து நேற்று அறிவித்தது. அதன்படி 2027-ம் ஆண்டு மார்ச் 11-15 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனினும் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் (1877-ம் ஆண்டு) மற்றும் 100-வது ஆண்டு போட்டிகளும் (1977-ம் ஆண்டு) இவ்விரு அணிகளுக்கு இடையே இதே மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை