சாம்பியன்ஸ் டிராபி: தொடர் நாயகன் விருது வென்ற மகிழ்ச்சியை விட அது வருத்தமாக உள்ளது - ரச்சின் ரவீந்திரா

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: தொடர் நாயகன் விருது வென்ற மகிழ்ச்சியை விட அது வருத்தமாக உள்ளது  ரச்சின் ரவீந்திரா

வெலிங்டன், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன் இலக்கை இந்திய அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக 76 ரன்கள் (83 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா (263 ரன், 3 விக்கெட்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.இந்நிலையில் இந்த தொடர் குறித்து சில கருத்துகளை ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார். அதில், "சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்றதை விட இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள வருத்தமாக உள்ளது" என்று கூறினார்.

மூலக்கதை