சூர்யா - வெங்கி அட்லூரி படத்தில் 2 கதாநாயகிகளா?

சென்னை,நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார்.இதையடுத்து 'வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் மாருதி கார்களின் புகழ்பெற்ற 796 சிசி இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும்நிலையில், தற்போது 2-வது கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூலக்கதை
