7-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிப்டி
மும்பை:அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட வர்த்தக போர் அச்சம், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துவருகின்றன.இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன. வர்த்தகத்தின் பெரும்பகுதி குறியீட்டெண் நேர்மறையாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 751.1 புள்ளிகள்வரை உயர்ந்து வர்த்தகமானது. கடைசி நேரத்தில் குறிப்பிட்ட ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் குறியீட்டெண் விறுவிறுவென சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 32.11 புள்ளிகள் சரிந்து 76,138.97 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 13.85 புள்ளிகள் சரிந்து 23,031.40 புள்ளிகளில் நிலைபெற்றது. இதன்மூலம் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் புளூ-சிப் நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நெஸ்லே, டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. சன் பார்மா, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டின.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று 4,969.30 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
