வசூல் வேட்டையில் "ரேகாசித்திரம்" திரைப்படம்

'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு , நடிகர் ஆசிப் அலி மீண்டும் மற்றொரு திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'ரேகாசித்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆசிப் அலி 'கூமன் : தி நைட் ரைடர்' மற்றும் 'தளவன்' படங்களுக்கு பிறகு மிண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மம்முட்டி நடித்த 'தி ப்ரீஸ்ட்' படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. முஜீப் மஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த ஜனவரி 9-ந் தேதி வெளியானது.இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படமே 2025ம் ஆண்டில் வெளியான மலையாளம் திரைப்படங்களில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதாகும்.A post shared by Asif Ali (@asifali)
மூலக்கதை
