ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ராஜ கோபால் சுன்கரா

  தினத்தந்தி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை  ராஜ கோபால் சுன்கரா

ஈரோடு,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 46 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், 3 கம்பெனி சிஐஎஸ்எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சித்தோடு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம், ஸ்ட்ராங் ரூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது என்றார்.

மூலக்கதை