தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க முயற்சி - செல்வப்பெருந்தகை
சென்னை,தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவின் முறை கொண்டு பழகி வரும் மக்களிடையே பழிகள், வதந்திகள், அவதூறுகள் மூலமாக தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் முயற்சி செய்ய நினைக்கின்றன.உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள், ஆன்மிக உள்ளம் கொண்டவர்கள், இறையியலாளர்களால் பாராட்டப்பட வேண்டிய அனைத்துச் செயல்களையும் ஆளும் அரசு செய்து வருகிறது. ஆனால் பா.ஜ.க.வுக்கு அதிலெல்லாம் துளியும் நம்பிக்கை கிடையாது. இறையியல், கடவுள், ஆன்மிகம் என்பதைவிட அவதூறுகள், வதந்திகள், பொய்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி கட்சி நடத்துபவர்களாக இருக்கிறார்கள.எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. வடநாட்டில் நிலவுவது போன்று, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பார்க்கின்றன. அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.வன்முறையோ குற்றச்செயலோ எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் அதனை யார் செய்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாமல் காவல்துறை கொண்டு அடக்க வேண்டும். வன்முறையைத் தூண்டிவிட சமூக விரோத மதவாத சக்திகள் முனையுமானால், அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அமைதியைக் குலைக்கும் எவராக இருந்தாலும் மக்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்பதை மதவாத சக்திகள் உணர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவின் முறை கொண்டு பழகி வரும் மக்களிடையே பழிகள்,…




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
