ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் பாஜக எம்.பி. வலியுறுத்தல்
புதுடெல்லி,மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசினார் . அப்போது, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சீனாவின் அனைத்து துறை ஆதிக்கம் குறித்து விரிவாக விளக்கினார் ராகுல் காந்தி.ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் தனது நாடாளுமன்ற உரிமையைப் பயன்படுத்தி தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாமல் வதந்திகளை பரப்புகிறார். உண்மைக்கு மாறான தகவல்களை அவைக்கு தெரிவித்திருக்கிறார். நமது நாட்டின் கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசி உள்ளார். மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை, ஆனால் இங்கு மட்டுமே சேகரிக்கப்படுகின்றன, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சீனாவின் அனைத்து துறை ஆதிக்கம் குறித்து விரிவாக விளக்கினார் ராகுல் காந்தி. இது குறித்து ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
