பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தும் பும்ரா பந்துவீச்சை கண்டு பயப்படும் ஆஸி. வீரர்

  தினத்தந்தி
பார்டர்  கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தும் பும்ரா பந்துவீச்சை கண்டு பயப்படும் ஆஸி. வீரர்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தம்முடைய 4 வயதாகும் சகோதரியின் மகன் (மருமகன்) பும்ராவை பார்த்து அவருடைய ஆக்சனில் தமக்கு எதிராக வீட்டில் பவுலிங் செய்வதாக மார்ஷ் கூறினார். அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை முடிந்தும் பும்ராவின் பந்துவீச்சு தமக்கு பயத்தை கொடுக்கிறது என்று கலகலப்பாக பேசினார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய சிறிய மருமகன் 4 வயது மட்டுமே நிரம்பியவர். அவருடன் நான் வீட்டில் கிரிக்கெட் விளையாடினேன். அப்போது அவர் ஜஸ்பிரித் பும்ராவின் ஆக்சனுடன் வந்து எனக்கு எதிராக பவுலிங் செய்தார். அந்த வகையில் பும்ராவின் நைட்மேர் எனக்கு தொடர்கிறது" என கூறினார்.அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்து ஒரு மாதம் ஆகியும் பும்ரா பந்துவீச்சு தமக்கு பயத்தை கொடுப்பதாக மார்ஷ் கூறியுள்ளார்.

மூலக்கதை