பட்ஜெட், மாத இறுதி... ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்கு சந்தைகள்

மும்பை,இந்திய பங்கு சந்தையில் இன்றைய வர்த்தக நிறைவானது, சாதக சூழ்நிலையுடன் முடிவடைந்து உள்ளது. பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் மற்றும் மாத இறுதி போன்ற சூழலில், பங்கு வர்த்தக குறியீடு ஏற்ற நிலையில் இருந்தது.இது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றும் இதே நிலை காணப்பட்டது. வர்த்தகத்தில் இந்த நேர்மறையான நிலை இன்றும் தொடருகிறது.இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 205.85 புள்ளிகள் உயர்வடைந்து, 23,163.10 புள்ளிகளாக நிலை கொண்டிருந்தது.நிப்டியிலுள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. 9 பங்குகள் சரிவடைந்து இருந்தன. இவற்றில், ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ. லைப் மற்றும் டிரென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன.எனினும், ஐ.டி.சி. ஓட்டல்கள், மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் பிரிட்டானியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக சரிவை கண்டிருந்தன.
மூலக்கதை
