சவுகரியமான சூழலில் ஒருபோதும் இருந்தது இல்லை: பிரதமர் மோடி
புதுடெல்லி, 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மோடி இந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:- எனது குடும்பத்தினரின் ஆடைகளை நான் துவைத்துள்ளேன். இதன் மூலம் குளத்திற்கு செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது. பள்ளியில் படித்த போது, எந்த வகையிலும் நான் கவனம் பெறாத நபராக இருந்தேன். ஆனால், எனது ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தனர்.நான் குஜராத் முதல் மந்திரியான பிறகு, எனது பழைய நண்பர்களை முதல் மந்திரி இல்லத்திற்கு அழைக்க விரும்பினேன். அதன்படி நானும் அழைத்தேன். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அவர்களை நான் நண்பர்களாக பார்க்க எண்ணினேன். ஆனால், அவர்கள் என்னை முதல் மந்திரியாக பார்த்தனர்.எனக்காக நான் எதையும் செய்ய மாட்டேன் எனவும், மூன்றாவதாக நானும் மனிதன். நானும் தவறு செய்யலாம். ஆனால், தவறான எண்ணத்தில் தவறு செய்ய மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இதனை எனது தாரக மந்திரமாக வைத்துள்ளேன். தவறு செய்வது இயல்பு. நானும் மனிதன் தான். கடவுள் கிடையாது. நான் சவுகரியமான சூழலில் ஒருபோதும் வாழ்ந்தது இல்லை. இதை எனது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். நான் சவுகரியான இடத்தில் இல்லாமல் இருந்ததன் காரணமாகவே என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்து வைத்து இருந்தேன். சவுகரியமான இடத்திற்கு நான் பொருத்தம் இல்லாத நபராக கூட இருக்கலாம்." என்றார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
