லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: 5 பேர் பலி
வாஷிங்டன்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
