கர்மா அசல் வட்டியோடு உங்களை வந்தடையும் - நயன்தாராவின் சர்ச்சை பதிவு
சென்னை,நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது கடந்த 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.இதற்கு முன்பு வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார். நடிகை நயன்தாராவுக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக, வொண்டர் பார்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அந்த விசாரணையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "பொய்யின் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழித்தால் அது கடன்பெற்றதுபோல வட்டியுடன் உங்களை வந்தடையும்" என்று சூசகமாகப் பகிர்ந்துள்ளார். A post shared by Netflix India (@netflix_in)




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
