விடாமுயற்சி' பட போஸ்டரை பகிர்ந்த நடிகை ரெஜினா

  தினத்தந்தி
விடாமுயற்சி பட போஸ்டரை பகிர்ந்த நடிகை ரெஜினா

சென்னை,தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.இதனிடையே நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் நேற்று இரவு 11மணிக்கு வெளியாகியுள்ளது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. RegenaCassandrra ഒരു പോസ്റ്റ് പങ്കിട്ടു (@reginaacassandraa)இந்நிலையில், நடிகை ரெஜினா விடாமுயற்சி' பட போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நமது விடாமுயற்சியின் முதல் பார்வை ! சினிமாவில் இருந்து மிகவும் திறமையான மற்றும் மிகவும் அன்பான நடிகர்களுடன் திரையை பகிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. விடாமுயற்சி டீசர் தற்போது வெளியாகியுள்ளது.விடாமுயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை