அதிகனமழை எச்சரிக்கை: 2,229 முகாம்கள் தயாராக உள்ளன - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

  தினத்தந்தி
அதிகனமழை எச்சரிக்கை: 2,229 முகாம்கள் தயாராக உள்ளன  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை,வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும், இது காரைக்கால் - மகாபலிபுரம் இடையே நாளை கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அத்துடன், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மிக முதல் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 முகாம்கள் தயாராக உள்ளன. பேரிடர் மீட்புப்படையினர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்." என்றார். இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;"இன்று (29.11.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.* இன்று (29.11.2024) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னை 2.7 செ.மீ., செங்கல்பட்டு 0.76 செ.மீ., மயிலாடுதுறை 0.71 செ.மீ., திருவள்ளூர் 0.64 செ.மீ., நாகப்பட்டினம் 0.40 செ.மீ., திருவாரூர் 0.3 செ.மீ., காஞ்சிபுரம் 0.16 செ.மீ., தஞ்சாவூர் 0.09 செ.மீ., கடலூர் 0.06 செ.மீ. உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.குறிப்பாக,* சென்னை – சாத்தாங்காடு 6.1 செ.மீ., எர்ணாவூர் 5.8 செ.மீ.,* செங்கல்பட்டு - பல்லாவரம் 2.92 செ.மீ., செம்மஞ்சேரி 2.4 செ.மீ.* திருவள்ளூர் - திருப்பாலைவனம் 2.56 செ.மீ., திருவெள்ளைவாயில் 2.56 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.நிவாரண முகாம்கள்* அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மீனவர்கள்* மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற 4153 படகுகள் கரை திரும்பியுள்ளன.கண்காணிப்பு அலுவலர்கள்* முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.* இதுமட்டுமின்றி, இன்று (29.11.2024) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை