கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு - ஐகோர்ட்டு கண்டனம்
சென்னை,தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் அந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களின் கலெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது அரசு தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாதது குறித்து நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், இதற்கு உதாரணமாக கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் இதுவரை அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பொதுத்துறை செயலாளர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகாததற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பொதுத்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர். மேலும் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
