இங்கிலாந்து வீரர் அடித்த பந்து.. பாய்ந்து கேட்ச் பிடித்த கிளென் பிலிப்ஸ் - வைரல் வீடியோ
கிறிஸ்ட்சர்ச்,நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் 41 ரன்களுடனும், டிம் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து இன்னும் 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது.இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 132 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் 53 ஓவரை டிம் சவுதி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் போப் அடித்த பந்தை நியூசிலாந்து அணியின் சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸ் பாய்ந்து பிடித்தார். பீல்டர் என்றால் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான் நம் நினைவுக்கு வருவதுண்டு. அவரை போலவே அந்தரத்தில் கேட்ச் பிடித்து கிளென் பிலிப்ஸ் அசத்தி உள்ளார் என்றும் விட்டால் அவரையே மிஞ்சி விடுவார் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.Glenn Phillips adds another unbelievable catch to his career resume! The 151-run Brook-Pope (77) partnership is broken. Watch LIVE in NZ on TVNZ DUKE and TVNZ+ #ENGvNZ pic.twitter.com/6qmSCdpa8u