முதல் முறையாக ஹாரர் படத்தில் ராஷ்மிகா மந்தனா - வெளியான அறிவிப்பு
சென்னை,இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான 'ஷைத்தான்' படம் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் வெளியான ஹாரர் படமான முஞ்யாயும் வெற்றி படமாக அமைந்தது. அதேபோல, சமீபத்தில் வெளியான ஸ்ட்ரீ 2 படமும் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்தது.இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஹாரர் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'முஞ்யா' இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர், தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.A post shared by Maddock Films (@maddockfilms)