திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம்
தூத்துக்குடி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்குகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதோடு பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜீவா, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் ஜீவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, நடிகர் ஜீவா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.