தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் பகிர்ந்த 'கூலி' படக்குழு

  தினத்தந்தி
தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் பகிர்ந்த கூலி படக்குழு

சென்னை,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 'லியோ' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'கூலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.'கூலி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. தற்போது, கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில், ஓய்வுக்கு பின்னர் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளநிலையில், 'கூலி' படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.இதனை கூலி படக்குழு புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளது. இதில், படக்குழுவினர் அனைவரும் கருப்பு நிற உடையணிந்தவாறு உள்ளனர்.Team #Coolie wishes everyone a Super Happy Deepavali@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/2n3QL3NACV

மூலக்கதை