ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

  தினத்தந்தி
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் கடந்த இரு நாட்கள் ஓய்வு நாளாகும்.இதையடுத்து இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின .பரபரப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் மோகன் பகான் வெற்றி பெற்றது. மோகன் பகான் அணியில் மண்விர் சிங், சுபாசிஸ் போஸ் ஆகியோர் கோல் அடித்தனர் .

மூலக்கதை