கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

  தினத்தந்தி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சென்னை,உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், பேருந்தில் ஏறி ஆய்வுகளை மேற்கொண்டார்.

மூலக்கதை