பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: மேலும் 3 பள்ளிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
சென்னை, கிருஷ்ணகிரியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பள்ளிகளிலும் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனின் மரணம் தொடர்பான வழக்கில் சேலம் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு பள்ளியில் மட்டும்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்றும், மற்ற 3 பள்ளிகளிலும் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
