பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா

  தினத்தந்தி
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா

அகமதாபாத்,நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. .இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 232 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த இந்தியா 44.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . இந்தியா தரப்பில் அதிகபட்சமாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சதம் (100 ரன்) அடித்தார். இந்த வெற்றியால் 2- 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் பெண்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனை ஒன்றை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். அதாவது, பெண்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலிராஜை (7 சதம்) பின்னுக்கு தள்ளி மந்தனா ( 8 சதம் *) முதல் இடத்திற்கு முன்னேறினார்.பெண்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த வீராங்கனைகள் பட்டியல்;ஸ்மிருதி மந்தனா - 8 சதம் *மிதாலி ராஜ் - 7 சதம்ஹர்மன்ப்ரீத் கவுர் - 6 சதம்

மூலக்கதை