குழந்தைகளுக்கான பயண விதிகளில் மாற்றமில்லை: இந்திய ரயில்வே

தினமலர்  தினமலர்
குழந்தைகளுக்கான பயண விதிகளில் மாற்றமில்லை: இந்திய ரயில்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : 'ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை' என, இந்திய ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியிட்ட அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம். இந்நிலையில், 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கும் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதியை, இந்திய ரயில்வே மாற்றியுள்ளதாக சமீப காலமாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. அவற்றில் உண்மை இல்லை.

ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் இந்திய ரயில்வே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 5 வயது வரையிலானோர் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே சமயம், அவர்களுக்கு தனியாக 'பெர்த்' தேவைப்படும் பட்சத்தில், வயது வந்தோருக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி : 'ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை' என, இந்திய ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை