மக்கள் ஆதரவு கோரி கெஜ்ரிவால் நாடு முழுதும் சுற்று பயணம்

தினமலர்  தினமலர்
மக்கள் ஆதரவு கோரி கெஜ்ரிவால் நாடு முழுதும் சுற்று பயணம்


புதுடில்லி : மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, டில்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, டில்லியிலும், பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆத் ஆத்மி, லோக்சபா தேர்தல் வாயிலாக மேலும் பல மாநிலங்களில் காலூன்ற திட்டமிட்டுள்ளது.






இந்நிலையில், டில்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில், ஆம் ஆத்மி சார்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், கெஜ்ரிவால் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் தங்கள் வீடுகளையும், உறவினர்களின் வீடுகளையும் செல்வத்தால் நிரப்பியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக மாற்ற, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, சம உரிமைகள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள். இருந்தும் நாம் ஏன் இன்னும் பின்தங்கி இருக்கிறோம்? கடவுள் இந்தியாவிற்கு ஆறுகள், மலைகள், மூலிகைகள், பயிர்கள், கடல் என அனைத்தையும் கொடுத்துள்ளார்.இந்தியாவால் உலகை வழிநடத்த முடியும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து, ஆம் ஆத்மியின் 'மேக் இந்தியா நம்பர் 1' என்ற தேசிய செயல்திட்டத்தில் இணையும்போது இது சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதுடில்லி : மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, டில்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.வரும் 2024ல் லோக்சபா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை