புதுக் கேப்டன்கள் தலைமையில் ஜிம்பாப்வே- இந்தியா மோதல்

தினகரன்  தினகரன்
புதுக் கேப்டன்கள் தலைமையில் ஜிம்பாப்வே இந்தியா மோதல்

ஹரோரே: ஜிம்பாப்வே சென்றுள்ள  இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த 3 ஆட்டங்களும் ஆக.18, 20, 22 தேதிகளில்  ஹரோரேவில் மட்டும் நடக்கின்றன. முதல் ஆட்டம் இன்று பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட  ராகுல்  காயம் காரணமாக அணியில் இருந்தே விலகினார். இப்போது  ஜிம்பாப்வே  தொடரில் மீண்டும் கேப்டனாகவே இணைந்துள்ளார். முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்க, முதல்மறையாக ஒருநாள் தொடருக்கு ராகுல் கேப்டனாகி உள்ளார். கூடவே  தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடுக்கு பதிலாக, விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக சென்றுள்ளார்.  அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெற்றிகரமான பயிற்சியாளர் என லட்சுமணன் நிரூபித்துள்ளார். அதே போல் ஜிம்பாப்வே கேப்டன்  கிரெயக் எர்வின் காயம் காரணமாக விலகவே ரெஜிஸ் சாகப்வே புதிய கேப்டனாக களமிறங்க உள்ளார். அதுமட்டுமல்ல  தலைமை பயிற்சியாளர் டேவிட் ஹூட்டன் தான் பொறுப்பேற்ற பிறகு ஜிம்பாப்வே  அணியை நீண்ட நாட்களுக்கு பிறகு உலக கோப்பைக்கு தகுதிப் பெற வைத்துள்ளார். ஆக  இந்த தொடரில், ‘மற்ற வீரர்களை விட இந்த அணிகளின் புதிய கேப்டன்களும், புதிய பயிற்சியாளர்களும், வீரர்களை எப்படி செயல்பட வைக்கப் போகின்றனர்’ என்பதுதான் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.இதுவரை நேருக்கு நேர்ஜிம்பாப்வே-இந்தியா அணிகள் இதுவரை மோதிய 63ஒருநாள் ஆட்டங்களில் 51 ஆட்டங்களில்  இந்தியாவும், 10 ஆட்டங்களில் ஜிம்பாப்வேயும் வென்றுள்ளன. உள்ளூரில் நடந்த  23 ஆட்டங்களில் ஜிம்பாப்வே 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது.அணி விவரம்:ஜிம்பாப்வே: ரெஜிஸ் சாகப்வே(கேப்டன்),  ரியான்,   டனகா , ஈவன்ஸ் லூக்,  இன்னோசன்ட்,  கய்டனோ, கிளைவ், வெஸ்லி, தாடிவான்ஷே, ஜோன்,  டோனி, ரிச்சர்டு, விக்டர்,  மில்டன், சிக்கந்தர் ராசா,   டொனல்டு. இந்தியா: கே.எல்.ராகுல்(கேப்டன்),  தவான்(து.கேப்டன்), ஆவேஷ்கான்,  சாஹர்,  ருதுராஜ்,  தீபக் ஹூடா,  இஷான், குல்தீப், சிராஜ், அக்சர்,  பிரசித், சஞ்சு சாம்சன், ஷூப்மன், ஷர்துல், ராகுல் திரிபாதி.

மூலக்கதை