துரந்தோ கோப்பை: பெங்களூர் வெற்றி

தினகரன்  தினகரன்
துரந்தோ கோப்பை: பெங்களூர் வெற்றி

துரந்தோ கோப்பை கால்பந்து  போட்டி  கொல்கத்தா,  இம்பால், கவுகாத்தியில் நடக்கின்றன. கொல்கத்தாவில் நேற்று  நடந்த லீக் ஆட்டத்தில்  ஏ பிரிவில் உள்ள ஜாம்ஷெட்பூர் எப்சி-பெங்களூர்  எப்சி அணிகள் மோதின.   அதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்  பெற்றது. பெங்களூர் தரப்பில் கேப்டன் சுனில் சேட்ரி, ராய் கிருஷ்ணா ஆகியோரும்,   ஜாம்ஷெட்பூர் தரப்பில் ரிஷியும் தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றிப் பெற்ற  உற்சாகத்தில்  சேத்ரியும், கிருஷ்ணாவும் களத்தில் கொண்டாடுகின்றனர்.

மூலக்கதை