பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது

தினகரன்  தினகரன்
பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று 60,000ஐ தாண்டியது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப பங்குச்சந்தைகளில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே துவங்கியது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளை தாண்டி  60,260.13 ஆனது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி வர்த்தக முடிவில் 119 புள்ளிகளை தாண்டி 17,944.25 ஆனது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துவந்தது, பங்குச்சந்தை ஏற்றத்துக்கு உதவியதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

மூலக்கதை