வங்கதேசம் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து: சோதனை வெற்றி

தினகரன்  தினகரன்
வங்கதேசம் வழியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து: சோதனை வெற்றி

அகர்தலா: கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் மொங்லா துறைமுகம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்கதேச துறைமுகங்கள் வழியாக சரக்குகளை கொண்டு செல்வது தொடர்பாக இருநாட்டிற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் போக்குவரத்து செலவும், போக்குவரத்து நேரமும், தூரமும் குறைகிறது. இந்நிலையில், கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள மோங்லா துறைமுகம் - பிபீர் பஜார் வழியாக ஸ்ரீமந்தபூருக்கு நேற்று சரக்கு கப்பல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வெற்றிகரகமாக வந்த இந்த கப்பலை திரிபுரா அமைச்சர் சந்தனா சக்மாவும், சிட்டகாங்கில் உள்ள இந்திய துணை தூதர் ராஜீவ் ரஞ்சனும் வரவேற்றனர். இந்த கப்பல் சில்சாருக்கு கொண்டு செல்லப்படும்.  இது குறித்து, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பவுமிக் கூறுகையில், ‘இது சரக்கு போக்குவரத்துக்கான புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கதேசம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கப்பல் மூலம் குறைந்த செலவில் விரைவாக எடுத்து செல்ல முடியும்,’ என்றார்.

மூலக்கதை