கியூட் 4ம் கட்ட தேர்விலும் தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தேர்வு ரத்து

தினகரன்  தினகரன்
கியூட் 4ம் கட்ட தேர்விலும் தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தேர்வு ரத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் நடத்தப்படும் ‘கியூட்’ தேர்வில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி நடந்த தேர்வின் போது, தொழில்நுட்ப கோளாறுகளால் 17 மாநிலங்களில் பல்வேறு மையங்களில் தேர்வு ரத்தானது. இதைத் தொடர்ந்து, கடந்த 5ம் தேதி 50 மையங்களிலும், 6ம் தேதி 53 மையங்களிலும் 3 கட்டத் தேர்வுகள் ரத்தாகின. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 4ம் கட்ட தேர்வு நேற்று நடந்தது. இதிலும், பல மையங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது. பல மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், மாணவர்கள் பாதித்தனர். இவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை