தோவல் வீட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட 3 வீரர்கள் டிஸ்மிஸ்

தினகரன்  தினகரன்
தோவல் வீட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட 3 வீரர்கள் டிஸ்மிஸ்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) கீழ் செயல்படும், விவிஐபி.க்களுக்கான சிறப்பு பாதுகாப்பு குழு அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு மிகுந்த அஜித் தோவலின் டெல்லி வீட்டிற்குள் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பாதுகாப்பு விதிகளை மீறி காரில் உள்ளே செல்ல முயன்றார். இது தொடர்பாக அன்றைய தினம் விவிஐபி. பாதுகாப்பு பணியில் இருந்த 3 வீரர்கள் மற்றும் டிஐஜி, மூத்த அதிகாரியிடம் சிஐஎஸ்எப். விசாரணை நடத்தியது. பின்னர், வீட்டு பாதுகாப்பில் இருந்த 3 வீரர்களை பணி நீக்கம் செய்தும், 2 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவலை சிஐஎஸ்எப் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மூலக்கதை