இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது: அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக அறிவிப்பு..!!

தினகரன்  தினகரன்
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது: அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக அறிவிப்பு..!!

கொழும்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மையமாக வைத்து வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். கோத்தபய வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே இலங்கையில் கடந்த ஜூலை 18ம் தேதியில் இருந்து அவசர நிலை அமலில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து நீட்டித்து வந்த ரணில் விக்ரமசிங்கே, இனி அவசர நிலை நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமான நிலையில் இருப்பதாக கூறியுள்ள அவர், இவ்வார இறுதிக்குள், அவசர கால சட்டத்தை நீட்டிக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது நாட்டை தட்டி எழுப்ப பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் ரணில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மூலக்கதை