ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி

தினமலர்  தினமலர்
ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி

தமிழில் எட்டு தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் தான் அறிமுகமான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்களும் திடீர் கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள இனி உத்ரம் என்கிற படம், வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் ராம், டுவல்த் மேன் மற்றும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் ஹரீஷ் உத்தமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மூலக்கதை